×

இருதரப்பு உறவை மேம்படுத்த 7 மாநில முதல்வர்கள் டாக்கா பயணம்

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஒன்றிய அரசின் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டு துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை கடந்த 7ம் தேதி ெடல்லியில் சந்தித்து பேசினார். இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான 4,096 கிமீ நீளமுள்ள எல்லைப்பகுதியானது வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளின் போராளிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.

இவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்து தாக்குதல் நடத்துவதால் அவர்களை ஒடுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 7 மாநில முதல்வர்களும் வங்கதேச தலைநகர் டாக்கா வரும்படி ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். இதற்கான முறையான அனுமதியை வங்கதேச அரசு அளித்துள்ளதால் 7 மாநில முதல்வர்களும் விரைவில் டாக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Chief Ministers ,Dhaka , 7 Chief Ministers visit Dhaka to improve bilateral relations
× RELATED தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க...