'யுரேனியம் துகள்கள்'விவகாரம்: ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சர்வதேச அணுசக்தி முகமை

நியூயார்க்: யுரேனியம் துகள்கள் விவகாரம் தொடர்பாக ஈரானுடன் சர்வதேச அணுசக்தி முகமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பாக ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அதே நேரம், அந்நாடு அணுகுண்டு தயாரித்தால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்படும் என அமெரிக்கா உள்ளிட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் கருதின. எனவே, இந்நாடு  அணுகுண்டு தயாரிப்பதை தடுப்பதற்காக, அந்நாட்டுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தின. இதில், 2015ம் ஆண்டு சமரசம் ஏற்பட்டது.

அதை உறுதி செய்யும் வகையில் அணு சமரச ஒப்பந்தம் - 2015 கையெழுத்தானது. இதன் மூலம், ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன. இதனிடையே ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் உலக நாடுகளுக்கு இடையே 2015ம் ஆண்டு அணுஆயுத ஒப்பந்தத்தை புதுப்பிக்க நீண்ட விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், வியென்னாவில் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ரபேல் க்ரோஸி, ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமியை சந்தித்துப் பேசினார்.

இந்த பிரச்சினையில் சர்வதேச அணுசக்தி முகமையுடன் ஈரான் ஈடுபாடு இல்லாமல் செயல்படுவதை சர்வதேச அணுசக்தி முகமை விமர்சித்தது. இது குறித்து சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்; யுரேனியம் துகள்கள் விவகாரம் தொடர்பாக ஈரானிய தலைவர்கள் நம்பகமான விளக்கங்களை வழங்கவில்லை. மேலும், ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்காக மட்டுமே என்று அந்நாடு சொல்வதை உறுதியாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories: