தமிழக அரசு சார்பில் கொரோனாவால் உயிரிழந்த செய்தியாளருக்கு நிதியுதவி

சென்னை: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்கள், இன்று (27.9.2022) “நியூஸ் 18 தமிழ்நாடு” செய்தி தொலைக்காட்சியில், திருவாரூர் மாவட்டத்தில், உதவி முதன்மைச் செய்தியாளராக பணியாற்றிய திரு. ஆர். குமரகுருபரன், அவர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக அகால மரணமடைந்ததையொட்டி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியத்திலிருந்து ரூ.10,00,000/- ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையினை அவரது மனைவி திருமதி. ராதிகா அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ.ஆ.ப., உடன் இருந்தனர்.

Related Stories: