ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: அரசுக்கு சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் கோரிக்கை

சென்னை : திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு அரசு நாட்டுக்கு முன் உதாரணமாக அமையும் வகையில் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக செயற்பாட்டாளரான எவிடன்ஸ் கதிர் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி வரைவு அறிக்கை ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய அவர் பின்னர் செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நாட்டுக்கே முன்னோடியாக ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக கூறினார். இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படுமானால் சாதி ஒழிப்புக்கு முக்கிய பங்காக அமையும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.  

Related Stories: