அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை தொடர்ந்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை தொடர்ந்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, அந்த கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடன்நடியாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு முதலில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதை எடுத்து மீண்டும் அவருக்கு பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதை எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்களாக சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் ஒரு சில தினங்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் இறுதியில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

Related Stories: