×

உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலை

டெல்லி : உச்சநீதிமன்றம் அரசியல் சாசனம் அமர்வில் விசாரிக்கப்படும் வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. கவனமாக கையாளவேண்டிய பாலியல் வழக்குகள் மற்றும் திருமணம் சார்ந்த வழக்குகளை தவிர பிற வழக்குகளின் விசாரணை நேரலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. எனினும் 4 ஆண்டுகளாக நேரலை நடைமுறைக்கு வராத நிலையில் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் வழக்குகளை நேரலை செய்ய தலைமை நீதிபதி லலித் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி முன்னேறிய பிரிவினருக்கான பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று முதல் முறையாக நேரலை செய்யப்பட்டது. செவ்வாய், புதன், வியாழன் கிழமை என வாரத்தில் 3 நாட்களில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனம் அமர்வில் விசாரணை நடைபெறும். தலைமை நீதிபதி லலித், சந்திரசூட் மற்றும் கவுல் தலைமையிலான அரசமைப்பு அமர்வுகளை விசாரிக்கப்படும் வழக்குகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளன. இதன் நேர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் பிற வழக்குகள் விசாரணையும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 


Tags : Supreme Court , Upper Caste, Reservation, Case, Supreme Court, Trial, Live
× RELATED திருமணம் செய்து கொள்வதாக கூறி...