×

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதியின் தீர்ப்பில் சில தவறுகள் உள்ளதாகவும், இதனால் கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துவிட்டதாகவும் பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு, பொதுக்குழு செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.


Tags : AIADMK General Committee ,Supreme Court , AIADMK General Committee, Appeal, Supreme Court
× RELATED அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான...