விளைச்சல் அதிகரிப்பால் அவக்கோடா பழங்கள் விலை சரிவு-கிலோ ரூ.200க்கு விற்பனை

கொடைக்கானல் : கொடைக்கானலில் அவக்கோடா பழங்கள் அதிக விளைச்சல் கண்டும் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் அதிக அளவில் தற்போது அவக்கோடா பழங்கள் விளைந்துள்ளன. கடந்த வருடத்தை காட்டிலும் இவ்வருடம் விளைச்சல் சற்று கூடுதலாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 மருத்துவ குணமும், அழகு கலைக்கும் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்களில் ஒன்றாக வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவக்கோடா பழங்கள் உள்ளன. வயிறு உபாதைகளுக்கும் இவ்வகை பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உடலை மெருகூட்டும் இவ்வகை பழங்கள் தற்போது விற்பனையில் சரிவை கண்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 250 முதல் 300 ரூபாய் வரை விற்பனையாகி வந்த பழங்கள் தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் வரை செல்லும் கொடைக்கானல் அவக்கோடா பழங்கள் தற்போது கிலோ ரூ. 200க்கும் கீழாக விற்பதால் கவலையடைந்துள்ளனர்.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களுக்குக்கூட கட்டுப்படியாகவில்லை என்று புலம்புகின்றனர். எனவே கொடைக்கானலிலேயே அரசு கொள்முதல் செய்யும் பழப்பண்ணையை நிறுவி பழ உற்பத்தியாளர்களுக்கு முறையான விலை கிடைக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: