குடிநீர் வாரிய லாரி டிரைவருக்கு வெட்டு: வாலிபர் கைது

பெரம்பூர்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (25). வியாசர்பாடியில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் தண்ணீர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று நள்ளிரவு குடிநீர் வாரிய அலுவலகம் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபரை, ரவிச்சந்திரனை எழுப்பி சதீஷ் எங்கே என கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு சதீஷ் யார் என்று தெரியாது என கூறியுள்ளார்.

உடனே அந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் ரவிச்சந்திரனின் தலை மற்றும் இடது கையில் சரமாரியாக வெட்டி உள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். உடனடியாக ரவிச்சந்திரனை மீட்ட ஊழியர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிந்து வியாசார்பாடி அன்னை சத்யா நகரை சேர்ந்த விக் னேஷ்வரன் (23) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: