காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

பல்லாவரம்: திரிசூலம், ஈஸ்வரி நகரை சேர்ந்த சுரேஷ் (எ) கார்த்திக் (27), பி.காம் படித்துவிட்டு, கேட்டரிங் தொழில் செய்து வந்தார்.  அப்பகுதி திமுக இளைஞரணி துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர், அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அந்த பெண் கார்த்திக்கிடம் பேசுவதை தவிர்வித்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது காதலியை சந்தித்து, தன்னை விட்டு விலகிச் செல்வதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர், இனிமேல் என்னிடம் பேசாதே, என கூறியுள்ளார். இதனால், விரக்தியடைந்த கார்த்திக், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கார்த்திக், நாளை (புதன்கிழமை) பல்லாவரத்தில் பிரியாணி கடை திறக்க முடிவு செய்து, அதற்காக அட்வான்ஸ் கொடுத்து, விளம்பர போர்டு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: