கீழ்ப்பாக்கம் பெண்கள் விடுதியில் நள்ளிரவு பரபரப்பு மருத்துவ கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபருக்கு அடிஉதை: தவறவிட்ட செல்போனை எடுக்க வந்த போது சிக்கினான், குளியல் அறையில் பெண்களை வீடியோ எடுத்ததும், உள்ளாடைகளை திருடியதும் விசாரணையில் அம்பலம்

சென்னை: கீழ்ப்பாக்கம் பெண்கள் விடுதியில் நள்ளிரவு உள்ளே புகுந்து தூங்கிய மருத்துவ கல்லூரி மற்றும் கலைக்கல்லூரி மாணவிகள் உட்பட 4 பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை இளம் பெண்கள் பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் மேல்படிப்பு படிக்கும் மாணவிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுனங்களில் பணியாற்றும் பெண்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையே இந்த பெண்கள் விடுதியில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விடுதியில் தங்கியுள்ள பெண்கள் சிலர் விடுதி காப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை விடுதி காப்பாளர் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த பெண்கள் விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் வந்து தூங்கிய 4 பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவி, கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் அந்த மர்ம நபர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. உடனே கண் விழித்த அந்த 2 மாணவிகளும் தங்களது படுக்கை அருகே வாலிபர் ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். தூங்கிய சக பெண்கள் அலறி அடித்து கொண்டு எழுந்தனர். இதை கவனித்த அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே இந்த மர்ம நபர் தனது செல்போனை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவிகளின் படுக்கை அறையிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். இதை கவனித்த மாணவிகள் மற்றும் பெண்கள் அந்த செல்போனை எடுத்து பார்த்த போது, அதில் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் மற்றும் பெண்கள் தூங்குவதை வீடியோக்கள் பல இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மாணவிகள் பலர் இது தனது வீடியோ என்று கூறி அழுது புலம்பியுள்ளனர். சிலர் தங்களது வீடியோக்களை அழித்தனர். அழித்த வீடியோக்கள் பல பெண்கள் குளிக்கும் போது எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் சொன்னால் தங்களுக்கு பாதிக்க கூடும் என்று கருதினர். அதேநேரம், தப்பி ஓடிய மர்ம நபர் 2 மணி நேரம் கழித்து, பெண்கள் விடுதியில் விட்டு சென்ற தனது செல்போனை எடுக்க மீண்டும் உள்ளே வந்துள்ளார். எப்படி இருந்தாலும் செல்போன் எடுக்க மர்ம நபர் திரும்ப வருவான் என்று மாணவிகள் மற்றும் பெண்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். அதன்படி மர்ம நபர் திரும்ப விடுதிக்கு வந்த போது, ஏற்கனவே திட்டமிட்டப்படி மாணவிகள், பெண்கள் மறைந்து இருந்து அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.அதைதொடர்ந்து, சம்பவம் குறித்து விடுதியில் உள்ள பெண்கள் கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் பெண்களிடம் சிக்கிய மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், திருவண்ணமாலை மாவட்டம் சித்தூர் பெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த்(22) என்று தெரியவந்தது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவன் வேலை முடிந்து வந்ததும், இந்த பெண்கள் விடுதியில் இரவு நேரங்களில் நோட்டமிட்டு யாரும் இல்லாத நேரத்தில் விடுதியின் குளியல் அறைக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை எடுத்து செல்வதும், பெண்கள் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்து வந்ததும் தெரிவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். அவனிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் உள்ள வீடியோக்கள் விடுதியில் உள்ள பெண்களே அழித்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இருந்தாலும் போலீசார் செல்போனில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரிக்கின்றனர்.

Related Stories: