பெண் நிருபரிடம் ஆபாசம் மலையாள நடிகர் கைது

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. இவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த சட்டம்பி என்ற படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இதையொட்டி ஒரு யூடியூப் சேனலுக்கு ஸ்ரீநாத் பாசி பேட்டி கொடுத்தார். ஒரு பெண் நிருபர் அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கேட்ட சில கேள்விகள் ஸ்ரீநாத் பாசிக்கு பிடிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த அவர், கேமராவை ஆப் செய்யுமாறு கூறிவிட்டு, அந்த பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசி அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் நிருபர் கொச்சி மரடு போலீசில் புகார் செய்தார். ஸ்ரீநாத்திடம் 2 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories: