ஆப் மூலம் ஆர்டர் செய்தால் பறந்து வந்து டெலிவரி:சவுதியில் புது முயற்சி

ரியாத்: உலகில் ஏற்பட்டுள்ள அசுர தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. உணவு தேடி மக்கள் சென்ற காலம் போய், வீட்டில் இருந்து ஒரு ஆப்பில் ஆர்டர் செய்தால்போதும், வீட்டுக்கு வந்து பெல் அடித்து உணவை கொடுத்து செல்கின்றனர். இதற்காக பல்வேறு உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதனால் யார் முந்தி கொடுப்பது என்ற போட்டி எழுந்து உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் முதன் முறையாக ஒரு ஆப்பில் ஆர்டர் செய்தால் பறந்தபடி வந்து டெலிவரி செய்கின்றனர்.

இது, நேரத்தை மிச்சப்படுத்துவதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆப்பில் உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆர்டர் செய்தால் காலை 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஊழியர்கள் பறந்தபடி வந்து டெலிவரி செய்கிறார்கள். இந்த ஆப்பில் முன்கூட்டியே ஆர்டர் செய்து, எந்த நேரத்துக்கு வேண்டும் என்று நேரத்தை குறிப்பிட்டால் டெலிவரி செய்யப்படுகிறது.

Related Stories: