பாக். ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் பலி

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு ராணுவ ஹெலிகாப்டரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஹர்னாய்  பகுதியில் கோஸ்ட் அருகே திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 மேஜர்கள் உட்பட ராணுவத்தை சேர்ந்த 6 அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமான விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 1ம் இதேபோல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

Related Stories: