×

4வது டி20ல் பாக். வெற்றி

கராச்சி: இங்கிலாந்து அணியுடனான 4வது டி20 போட்டியில், பாகிஸ்தான் 3 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச... பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன் குவித்தது. ரிஸ்வான் 88 ரன் (67 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் பாபர் 36, ஷான் மசூத் 21, ஆசிப் அலி 13* ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, 19.2 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டக்கெட் 33, புரூக் 34, கேப்டன் மொயீன் 29, டாவ்சன் 34 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

வெற்றிக்கு 4 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஸ்டோன், டாப்லி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது நவாஸ், ஹரிஸ் ராவுப் தலா 3, ஹஸ்னைன் 2, முகமது வாசிம் 1 விக்கெட் வீழ்த்தினர். ராவுப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 என சமநிலை வகிக்க, 5வது போட்டி லாகூரில் நாளை நடக்கிறது.


Tags : Pak in 4th T20. success
× RELATED உலகக்கோப்பை கால்பந்து 2022:...