ஆன்லைன் சூதாட்டத் தடை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில்: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. முந்தைய ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிய அவசர சட்டத்தை அரசு கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: