×

திருமாவளவன் பேட்டி பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்ய வேண்டும்

சென்னை:  தமிழீழ விடுதலைக்காக 12 நாட்கள் உண்ணாநிலை மேற்கொண்டு மரணமடைந்த திலீபன் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. விசிக சார்பில் வீரவணக்க நிகழ்வு, சென்னை அசோகர் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஈழம் இல்லையேல் தமிழர்களுக்கு விடிவு இல்லை என முழங்கியவர் திலீபன். திலீபனின் வழியில் வடக்கு, கிழக்கு மாகாணம் தனித்தனியே பிரிக்க வேண்டும். அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்படும். காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதாகவும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்நோக்கத்திற்காக மட்டுமே 50 இடங்களில் பேரணி நடத்துகின்றனர். 2024 தேர்தலை முன்னிறுத்தியே, இந்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை வன்மையாக கண்டிப்பப்படுகிறது. குண்டு வீசியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்றார்.Tags : Thirumavalavan , Thirumavalavan interview: Those who threw petrol bombs should be arrested
× RELATED திமுக தலைமையிலான கூட்டணி...