ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவம், வாள் கண்டெடுப்பு

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூரில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள், மீன் தூண்டில், முள், வாள், கத்தி கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அகழாய்வு பணியில் இதுவரை 85க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப்பகுதிகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் அகழாய்வு பணியில் வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர் கோழி உருவங்கள், மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாத இறுதியுடன் நிறைவு பெற உள்ள இந்த அகழாய்வு பணியில் தொடர்ந்து அருங்காட்சியகப் பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: