உளுந்தூர்பேட்டை அருகே கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 3 பெண்கள் பலி

உளுந்தூர்பேட்டை: சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏஜாஸ்(28). இவரது மனைவிக்கு சேலத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஏஜாஸ் குழந்தையை பார்க்க குடும்பத்தினருடன் நேற்றுமுன்தினம் சேலத்திற்கு சென்றுவிட்டு காரில் இரவில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் கொட்டும் மழையில் வந்தபோது  தடுப்புக்கட்டையில் மோதி சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஹமீம், அம்ரின், சுபேதா ஆகிய மூன்று பெண்களும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஏஜாஸ், நமீம் காயமடைந்தனர்.

Related Stories: