கணவர் கண்முன்னே கர்ப்பிணி பலாத்காரம்

மேதினிநகர்: ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள படான் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண். கர்ப்பிணியான இவர் கடந்த சனிக்கிழமை, மாமியார் வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரைத் தேடி, அவரது கணவரும், உறவினரும் பைக்கில் வந்துள்ளனர். பலுவாகி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே அந்த பெண் நடந்து சென்ற போது, கணவரும், உறவினரும் அவரை நிறுத்தி சமாதானம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கில் வந்த 6 பேர் கணவரையும், உறவினரையும் அடித்து உதைத்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை அருகில் இருந்து பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு 6 பேரும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் கணவர் போலீசில் புகார் கூறி உள்ளார். பலாத்காரம் செய்த 2 பேரின் அடையாளங்களை அவர் கூறி உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்துள்ளனர். கர்ப்பணி பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேதினிநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: