உ.பியில் இரும்பு ராடால் ஆசிரியர் அடித்ததில் தலித் மாணவன் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தை சேர்ந்தவன் நிக்கித் தோஹ்ரே. அவுரியாவில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சமூக அறிவியல் தேர்வில் பதில்களை தவறாக எழுதியாக கூறி கடந்த 7ம் தேதி ஆசிரியர் அஸ்வினி சிங், மாணவன் நிக்கித்தை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். தடி மற்றும் இரும்பு ராடு ஆகியவற்றால் அடித்ததோடு அவன் மயங்கி விழும் வரை காலாலும் எட்டி உதைத்துள்ளார். நிக்கித் மயங்கி விழுந்த தகவல் அறிந்த குடும்பத்தினர் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு நிக்கித் கண்கள் இரண்டும் வீங்கிய நிலையில் மயங்கி கிடந்துள்ளான். உடனடியாக மாணவனை மீட்டு எடாவா மாவட்டத்தில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனியன்று இரவு நிக்கித் உயிரிழந்தான். ஆசிரியர் அடித்ததால் தனது மகன் இறந்துவிட்டதாக அவரது தந்தை அவுரியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவான ஆசிரியர் அஸ்வினி சிங்கை பிடிப்பதற்கு மூன்று குழு அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: