திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மான்ட நாயகனின் பிரம்மோற்சவம் நாளை கொடி ஏற்றத்துடன் தொடக்கம்: நாளை இரவு பெரிய சேஷ வாகனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மான்ட  நாயகனின் பிரம்மோற்சவம் நாளை கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து நாளை இரவு பெரிய சேஷ வாகனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கலியுக தெய்வமான சீனிவாச பெருமாளுக்கு முதலில் பிரம்ம தேவன் உற்சவத்தை  நடத்தியதால் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி  எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும் விதமாக மீன லக்னத்தில் பிரம்மோற்சவம் நாளை கோயிலில் கொடி ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி இன்று  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்காண அங்குரார்பனம் இரவு நடைபெற உள்ளது.

இதில் சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வசேனதிபதியை கோயில் அர்ச்சகர்கள் ஜீயர்கள் முன்னிலையில் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழுங்க கொண்டு சென்றனர். அங்குள்ள சுத்தமான பகுதியில் மண் எடுக்கப்பட்டு கோயிலில் உள்ள யாக சாலையில் 9 பானைகளில் வைத்து நவதானிங்கள் செலுத்தி முளைகட்டும் விதமாக பூஜை செய்யப்பட்டது.

இந்த அங்குரர்பணத்திற்கு சந்திரன் அதிபதியாக இருந்து சுக்லபட்ச காலத்தில் வளரும் சந்திரனை போன்று தினந்தொறும் நவதானியங்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படவுள்ளது.

* பிரம்மான்ட  நாயகனின் பிரம்மோற்சவம் நாளை கொடி ஏற்றத்துடன் தொடக்கம்

பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவத்திற்காக. புதிய மஞ்சள் துணியில் கருடர் உருவம் வரையப்பட்ட கொடியை நாளை மாலை நான்கு மாடவீதியில் உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி தயார்களுடன்  மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழுங்க கருட கொடி கொடிமரத்தில் ஏற்றப்படவுள்ளது. இந்த பிரம்மோற்சவ கொடி ஏற்றமே சகல தேவதைகளையும் அஷ்டதிக் பாலகர்களான பூத, பேரேதா, யக்சா, ராக்‌ஷச, கந்தர்வ குணத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று முக்கோட்டி தேவதைகள் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தை காண்பதாக ஐதீகம்.

 

* நாளை இரவு பெரிய சேஷ வாகனம்

 

பிரம்மோற்சவம் கொடி ஏற்றப்பட்ட  முதல் நாளான நாளை இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பன் நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கவுள்ளார். சீனிவாச பெருமாள் குடியிருக்கும்  மலையும்  அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் ( ஆதி சேஷன் ) மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நாளை ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறவுள்ளது.

பிரம்மோற்சவத்திற்காக திருப்பதி மற்றும் திருமலை வண்ண மின் விளக்குகள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் விதமான அலங்கரிக்கப்பட்டும் பக்தர்களை வரவேற்க்கும் விதமாக அலங்கார வளைவுகளால் கலியுக வைகுண்டமாக காட்சியளிக்கிறது.

Related Stories: