சூளகிரி அருகே 7 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி: கிடா வெட்டி வழிபாடு

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெத்தசிகரளப்பள்ளி ஊராட்சி குரல்தொட்டி கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் குரல்தொட்டி, தின்னூர், சிள்னதின்னூர் பாப்பனப்பள்ளி, கார்பாலா, ஆறுப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும். இதனால் விவசாயம் செழிக்கும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக சரிவர மழை இல்லாததால் இந்த ஏரி வறண்டு கிடந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் தற்போது ஏரி நிரம்பி உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை கொண்டாடும் வகையில் நேற்று ஏரியில் ஒன்று திரண்ட மக்கள் கிடா வெட்டி வழிபட்டனர். மேலும்  பெண்கள் ஏரிக்கரைக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஏரி அருகில் சிறப்பு பூஜை செய்ததுடன் , தெப்பம்விட்டும் வழிபட்டனர்.

Related Stories: