ஓசூரில் வீட்டுக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு: குடியிருப்புவாசிகள் அச்சம்

ஒசூர்: ஓசூர் கே.சி.நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் பல இடங்களில் முட்புதர்கள் சுத்தம் செய்யப்படாத கழிவு நீர் கால்வாய்கள் உள்ளன. இந்தப் பகுதியில் இருந்த அடிக்கடி விஷ பாம்பு, பூச்சிகள் வீடுகளுக்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் இந்த பகுதியில் பல இடங்களில் மழை நீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. கே.சி.சி. நகர் பகுதியில் அமைக்கப்படாத சாலைகள், சுத்தம் செய்யப்படாத கழிவு நீர் கால்வாய்கள். முட்புதர்கள் இருப்பதால் இந்த பகுதிகளில் நாகப்பாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவிரியன் உள்ளிட்ட பல பாம்புகள் உள்ளன.

நேற்று ஒரு வீட்டிற்குள் கண்ணாடி விரியன் நுழைந்தது. இதை கண்டதும் குடும்பத்தினர்  அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் பாம்பு பிடி வீரர் டேவிட் மாறனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அந்தப் பாம்பை பிடித்து ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே சானமாவு வனப்பகுதியில் கொண்டு விட்டார். குடியிருப்புகளுக்குள் அடிக்கடி பாம்புகள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: