தேரூர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது பட்ட சூரிய ஒளிக்கதிர்கள்

சுசீந்திரம்: சுசீந்திரம் அருகே தேரூரில் இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான எடுத்த ஆயுதமுடைய சிவபெருமான் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் 9ம் தேதி அதிகாலையில் கோயில் குளத்தில் சூரிய ஒளிக்கதிர் விழுந்து பிரதிபலித்து, அது நேராக சிவலிங்கம் மேல்படுவது வழக்கம். அதுபோல இன்றும் இக்காட்சி தெரிந்தது.

அதிகாலை 6 மணியளவில் சூரிய கதிர்கள் கோயில் குளத்தின் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து நேராக கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இந்த அற்புத காட்சியை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: