திண்டுக்கல் மலைக்கோட்டையை பசுமையாக்குவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சர் சீனிவாசனுக்கு எதிராக ஆட்சியரிடம் பரபரப்பு புகார்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டையை பசுமையாக்குவதாக கூறி அரசுப்பணம் 50 லட்சம் ரூபாயை விரையமாக்கிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது திண்டுக்கல் மலைக்கோட்டை மீது பல்வேறு விதமான மரங்களை நட்டு அதனை சொட்டுநீர் பாசனம் மூலம் வளர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அத்தி, அரசு, இச்சி, கல் இச்சி உள்ளிட்ட மரங்களை அப்போதைய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நட்டார். ஆனால் அதன்பிறகு அதனை வளர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அரசுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதில் சம்பந்தப்பட்ட சீனிவாசன் மீதும் விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. குறிப்பிட்டவாறு 5 ஆயிரம் மரக்கன்றுகளை மலைக்கோட்டையில் நடவில்லை என்றும் நட்ட கன்றுகளை முறையாக பராமரிக்கவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு முறையான விசாரணை நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: