காளிஃபிளவர் பொரியல்

செய்முறை

காளிஃபிளவரை கொத்து கொத்தாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து, லேசாக கிளறிவிடவும். பின்னர் சுடுநீரில் வடிகட்டிய காலிஃபிளவரை போட்டு, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி வேக வைக்கவும். காளிஃபிளவர் வெந்தவுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

* மசால் வாசனை வேண்டாம் என்றால் இஞ்சி பூண்டு விழுது மற்றும் மசாலா தூள் சேர்க்காமல், சீரகம் அல்லது சோம்புத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

* காளிஃபிளவருடன் தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. சேர்த்தால் காளிஃபிளவர் குழைந்துவிடும்.

Related Stories: