ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, பேரணிக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக்கோரி திருமாவளவன் ஐகோர்ட்டில் மனு

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, பேரணிக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக்கோரி திருமாவளவன் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. பாஜக விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளில் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: