பிரசவவலியல் துடித்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டுகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே அடந்த காட்டு பகுதியில் பிரசவவலியல் துடித்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பேச்சுப்பாறை அருகே கொழிஞ்சி கிராமத்தை சேர்ந்த அபிஷா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவ உதவி கேட்டு அந்த கிராமத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ், அபிஷாவை ஏற்றிக்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றுகொண்டு இருத்தது.

ஆனால் பதிவழியிலையே யானைகள் நடமாட்டம் கொண்ட காட்டு பகுதியில் அபிஷாவுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. உடன்நடியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹாஜிஷ் வாகனத்தை நிறுத்தியதும் உடனிருந்த ஆண் செவிலியர் சுஜின்ராஜ் வலியால் துடித்த அபிஷாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். சிலநிமிடங்களில் அபிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இருவருக்கும் சுஜின்ராஜ் முதல் உதவி கொடுத்திருக்கிறார். பின்னர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் குழந்தையும் நலம்முடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். அவசர காலத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு உதவிய சுஜின்ராஜ் மற்றும் ஓட்டுநர் ஹாஜிஷ்-க்கு அப்பகுதி கிராம மக்களும், மருத்துவர்களும் பாராட்டியுள்ளனர்.

Related Stories: