பெண் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்ட விமான பயிற்சி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை: 5 அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு

பெங்களூரு: பெண் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்ட விமான பயிற்சி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, 5 விமானப்படை அதிகாரிகள் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் பெங்களூருவில் உள்ள விமானப்படை தொழில்நுட்பக் கல்லூரியின் ஒரு அறையில் சந்தேகத்திற்கிடமான நிலையில், பயிற்சி அதிகாரி அங்கித் குமார் ஜா (27) என்பவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அங்கித் குமார் ஜாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் ஒரு ஏர் கமடோர், ஒரு குரூப் கேப்டன் மற்றும் இரண்டு விங் கமாண்டர்கள் உட்பட 6 விமானப்படை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இவ்விவகாரம் குறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘கடந்த ஜூன் 30ம் தேதி பெண் பயிற்சி அதிகாரி ஒருவரிடம், அங்கித் குமார் ஜா தவறாக நடந்து கொண்டார். பெண் அதிகாரியின் புகாரின் பேரில், விமானப்படை நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறியப்பட்டது. அதையடுத்து அங்கித் குமார் தொடர் பயிற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் விமானப்படையில் சேர்வதற்கான தடையும் விதிக்கப்பட்டது. அங்கித் குமார் ஜாவுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், கடந்த 23ம் தேதி சந்தேகமான முறையில் இறந்தார். அங்கித்தின் மரணம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: