பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நேற்று கோதண்டராமன் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியின் சாரணர் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கலாதரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அபிராமி குமரவேல், பள்ளி தாளாளர் மகேந்திரன், தலைமையாசிரியர் சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மைபணி மேற்பார்வையாளர் செலபதி வரவேற்றார்.

பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பள்ளி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்று, நகரங்களின் தூய்மை குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அப்பள்ளி வளாகம், பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். இதையடுத்து ஒவ்வொரு வீடாக சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: