கலவை அருகே நடும் பணிக்காக 100 நாள் வேலை தொழிலாளர்கள் மூலம் பனை விதை சேகரிக்கும் பணி-கலெக்டர் துவக்கி வைத்தார்

கலவை :  கலவை அருகே  பனை விதைகள் நடும் பணிக்கு 100 நாள் வேலை பெண்  தொழிலாளர்களைக் கொண்டு பனை விதைகளை  சேகரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் நேற்று துவக்கி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் கலவை தாலுகாவிற்கு உட்பட்ட கலவை அடுத்த ஆரூர் ஊராட்சியில் கன்னிகாபுரம் மற்றும் ஆரூர் கிராமத்தில் 100 நாள் வேலை தொழிலாளர்களைக் கொண்டு பனை மரங்கள் அதிகம் உள்ள இடங்களில் இருந்து கீழே விழுந்த விபரங்கள் சேகரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பனை விதைகள் மற்றும்   பழங்களை பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரமாக தேடி சேகரித்த விதைகளை ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு இடம் என தேர்வு செய்து சேகரிக்கும் பணியை நேற்று  தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பசுமை தமிழகம் என்ற திட்டத்தின் கீழ்  தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

அதன்படி நேற்று  ஆரூர், சொரையூர், தோனிமேடு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 நாள் வேலை பெண்  தொழிலாளர்கள் மூலம் வனத்துறையினர் உடன் இணைந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர  பாண்டியன், மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷாநவாஸ், தாசில்தார் ஷமீம், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் தனசேகர், வன காவலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முனிசாமி, தண்டபாணி, வருவாய் ஆய்வாளர் ஜெகநாதன்  மற்றும் ஆரூர்குமார் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், 100 நாள் திட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.  

Related Stories: