கொரிய நாட்டின் முன்னணி சிவில் பொறியியல் ஆலோசனை கழக குழுவினருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு..!!

சென்னை: கொரிய நாட்டின் முன்னணி சிவில் பொறியியல் ஆலோசனை கழக குழுவினருடன் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து பேசினார். கொரிய நாட்டின் முன்னணி சிவில் பொறியியல் ஆலோசனை கழக குழுவினரின் செல்வி. ஜயாங் இம் தலைமையில், இன்று  தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து “பொறியியல் சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக செயல்படுத்துவது“ தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

தற்போது, கொரியாவில் நடைமுறையில் உள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன்கூடிய, விரைவாகவும், எளிதாகவும் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், இதுவரை பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், தமிழ்நாட்டில் தொடங்கவிருக்கும் பல்வேறு சிவில் பொறியியல் திட்டங்கள் குறித்தும்  விரிவாக விவாதிக்கப்பட்டது.

    

    

இந்த விவாதத்தின்போது, செல்வி.ஜயாங் இம், கொரிய பொறியியல் ஆலோசனை கழகம் (KECC), திரு.ஜயாங் ஜியோங் CEO, சங்மோ ஜெனரல் கன்ஸ்ட்ரக்ஷன், கொரியா, திரு. ஜங் சூ சாங் CEO, டேடோ என்டெக், கொரியா, திரு.முகமது சஹீத் (KECC), அபுதாபி, திரு.முகமது ரஃபி (KECC), அபுதாபி, திரு.ராஜ்குமார், சென்னை, இந்தியா, திரு.மராட்டி ரவி, ஹைதராபாத், இந்தியா ஆகியோர் பங்கேற்றனர்.

திரு.பிரதீப் யாதவ் இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, திரு.மணிவாசகன் இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், பொதுப்பணித்துறை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்றனர்.

Related Stories: