ஊட்டி நஞ்சநாடு, கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணைகளில் 25 டன் விதை கிழங்கு உற்பத்தி-நவம்பர், டிசம்பரில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்

ஊட்டி :  ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள  25 டன் விதை கிழங்குகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். பயிர்சாகுபடியிலும், சீதோஷஅண நிலையிலும் அண்டைய மாவட்டங்களைக் காட்டிலும் பெருமளவு வேறுபட்டது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 2545 சதுர கிலோ மீட்டராகும். இம்மாவட்டத்தில் 6 வருவாய் வட்டங்கள் உள்ளன. சராசரி மழையளவு ஆண்டொன்றிற்கு 1522.7 மில்லி மீட்டர் ஆகும்.

நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்பவெட்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. முறையே காய்கறிகள், பழங்கள், வாசனைதிரவிய பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலைத் தோட்டப்பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் (Terrace cultivation) மற்றும் சில கிரஆமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. மலையின் உயரமான பரப்பில் உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி மற்றும் இதர வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

மலையின் இடைப்பட்ட பகுதிகளில் கமலாஆரஞ்சு, காபி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த உயரப்பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் துரியன், லிச்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான் போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை பயிரான மலை காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு நீர்போகம், கார்போகம் மற்றும் கடை போகம் என மூன்று பருவங்களாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் ேமற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக மலை காய்கறி பயிர்கள் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிாிப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பண்ணைகளில் இருந்து சில்வர் ஓக் நாற்றுகள், தேயிலை நாற்றுகள், விதை கிழங்கு, முட்டைகோஸ் நாற்றுகள், சைனீஸ் காய்கறி நாற்றுகள், இயற்கை உரங்கள், மண்புழு உரங்கள் போன்றவைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.  

இதனிடையே  ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள  25 டன் விதை கிழங்குகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊட்டி நஞ்சநாடு, கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணைகளில் விதை கிழங்குகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. குப்ரி கிரிதாரி, குப்ரி ஜோதி, குப்ரி ஸ்வர்னா, குப்ரி ஹிமாலினி, குப்ரி சாஹியத்ரி மற்றும் குப்ரி கரன் ஆகிய ரகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பண்ணைகளில் அண்மையில் உற்பத்தி செய்யப்பட்ட 25 டன் விதை கிழங்குகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதேபோல், முத்தோரை மத்திய உருளைகிழங்கு ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விதை கிழங்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை வழங்கப்படும்’’ என்றனர்.

Related Stories: