ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் விரைவில் ஐபோன் 14 உற்பத்தி... உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் விலை குறைய வாய்ப்பில்லை

காஞ்சிபுரம்: ஆப்பிளின் புதிய மாடலான ஐபோன் 14 ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் விரைவில் உற்பத்தியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய இந்தியாவில் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் என்ற 3 நிறுவனங்களும் தயாரிப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றன. கடந்த 2017 முதல் ஐபோன் SC, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தபட்ட ஐபோன் 14 ரகம் போன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்வதை அந்நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் விரைவில் ஐபோன் 14 உற்பத்தியை தொடங்கவுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஐபோன்கள் உள்ளநாட்ல மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. ஐபோன்களின் முதன்மை உற்பத்தியாளராக சீனாவையே ஆப்பிள் நிறுவனம் பெரிதும் சார்ந்திருந்தது. சமீபத்தில் வரி ஏய்ப்பு உள்பட சீன பிராண்டுகள் மீது புகார்கள் எழுந்ததையடுத்து சீனாவை கடந்த  பிற இடங்களில் உற்பத்தியை தொடங்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்பதற்காக விலையில் எந்த சமரசமும் செய்யப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: