முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு: ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் குறித்து ஆலோசனை..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளின் அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர் . அக்டோபர் மாத இறுதியில் சட்டசபை கூட்டம் நடக்க உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக, தமிழக மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறைவேற்றப்பட உள்ள சட்டங்கள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை, புதிய முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

Related Stories: