சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம்

சென்னை : ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அரசு மருத்துவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னை ஆட்சி தலைவர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் 200-க்கு மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசாணையின் 354-ஐ  மறுஆய்வு செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், பணி நேரத்தை நீடிக்கும் விதமாக உள்ள அரசாணை எண் 225-ஐ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவர்களின் சேமநல நிதிதிட்டத்தில் சேர்ந்துள்ள பயனாளிகளுக்கு சேமநல நிதி உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தங்களின் நீண்ட கால நியாமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், அரசு உடனடியா அழைத்து பேச வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

Related Stories: