பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசு எடுக்கும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் தக்க நேரத்தில் தமிழக அரசு எடுக்கும் என்று துரைமுருகன் கூறியுள்ளார். பாலாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழக அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாலறு அணை பற்றி ஆந்திர முதல்வர் பொதுக்கூட்டத்தில் பேசியதை வைத்து எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் அறிக்கை விட்டிருக்கிறார். எந்த அணையும் கட்டாத ஈபிஎஸ்க்கு நிர்வாகரீதியான செயல்பாடுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  

Related Stories: