பெண்களிடம் செயின் பறிப்பு

வேளச்சேரி: அடையாறு, 2வது பிரதான சாலையை சேர்ந்தவர் தனலட்சுமி (54).  இவர்,  நேற்று முன்தினம் இரவு, காந்தி நகர், 3வது பிரதான சாலையில் நடைபயிற்சி  சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள்,  தனலட்சுமி அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்

வேளச்சேரி, நடராஜன் தெருவை சேர்ந்தவர் மஞ்சு(23). இவர் தனியார் நிறுவன ஊழியர்.  நேற்று முன்தினம் இரவு, பணி முடித்துவிட்டு, தரமணி,நூறடி சாலையில், இவர்  நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, இரண்டுசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், மஞ்சு அணிந்திருந்த, 5 சவரனை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிசென்றனர்.

Related Stories: