சென்னையில் வீடு எடுத்து தங்கி கத்தி முனையில் தொடர் வழிப்பறி ஆந்திர கும்பல் சுற்றிவளைத்து கைது

சென்னை,: புதுப்பேட்டை சியாணி தெருவை சேர்ந்தவர் கில்டர்ஸ் (50). இவர் நேற்று முன்தினம் மாலை எழும்பூர் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கத்தி முனையில் மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் கில்டர்ஸ் புகார் அளித்தார். அதேபோல், பல்லவன் சாலையை சேர்ந்த ெசந்தில்குமார் (42) நேற்று முன்தினம் இரவு எழும்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலில் அவரது செல்போன் மாயமானது. இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அடுத்தடுத்து வந்த புகாரை தொடர்ந்து எழும்பூர் போலீசார் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்நத் ராஜேஷ் (27), சந்தோஷ் (26), மது (19), யசோதா (60),  விசாகப்பட்டிணத்தை சேர்ந்த கனகராஜ் (35) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் 6 பேரும், ஆந்திர மாநிலத்தில் இருந்து வழிப்பறி செய்வதற்காகவே சென்னை வந்து, அம்பத்தூர் பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கி, பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் தொடர் செல்போன் மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவன் உட்பட 6 பேரையும் போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: