கருவிலேயே குழந்தைகள் ஸ்மார்ட் இனிப்புக்கு செம சிரிப்பு கசப்புக்கு முகச் சுளிப்பு

லண்டன்: கருவில் இருக்கும் போதே குழந்தைகள் சங்கீதத்தை ரசிக்கின்றன.  தாயின் இன்ப, துன்பத்தையும் தனது அசைவுகள் மூலம் பிரதிபலிக்கின்றன. இதனால், கருவில் இருக்கும் போதே குழந்தைகளுக்கு  இப்போதுள்ள பெண்கள், பாடம் எடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில், கருவில் வளரும் போதே இனிப்பு, கசப்புகளை குழந்தைகள் ருசித்து, அதற்கேற்ற முகபாவனைகளை காட்டுகின்றன என்பதை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். கருவுற்ற 100 பெண்களை தேர்வு செய்த விஞ்ஞானிகள், அவர்களை 2 பிரிவாக பிரித்தனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு கேரட் சுவை அடங்கிய கேப்சூல் மாத்திரையையும், மற்றவர்களுக்கு பரட்டைக் கீரையின் சுவை அடங்கிய கேப்சூல் மாத்திரையையும் வழங்கினர்.

இதை சாப்பிட்ட 20 நிமிடங்களுக்கு பிறகு இப்பெண்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் செய்யப்பட்டனர். இதில், பரட்டைக்கீரை கேப்சூல் விழுங்கிய பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தைகள், கசப்பு தாங்காமல் முகத்தை சுளித்து கொண்டிருப்பது  பதிவானது. அதே நேரம். கேரட் கேப்சூல் விழுங்கிய பெண்களின் வயிற்றில் இருந்த குழந்தைகள், இனிப்பின் சுவையால் சிரித்த முகத்துடன் இருந்தன.  இதன்மூலம், கருவில் வளரும் போதே, இனிப்பு, கசப்பின் தன்மையை குழந்தைகள் அறிந்து ருசிக்கின்றன என்பது உறுதியாகி இருக்கிறது.

Related Stories: