வேணு சீனிவாசன் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டிவிஎஸ் மேட்டார் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் தாயார் பிரேமா சீனிவாசன்  இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். போற்றி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் வேணு சீனிவாசன் மற்றும் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: