காஷ்மீரில் 2 தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒருபுறம் சினிமா திரையரங்குகள் கொண்ட வணிக வளாகம் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி கொண்டிருந்தாலும், மறுபுறம் தீவிரவாத தாக்குதல், ஊடுருவல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் யூனியன் பிரதேச போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மெஷில் பகுதியில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசாருடன் இணைந்து ராணுவத்தினர் நேற்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தெக்ரி நர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த 2 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அவர்களிடமிருந்த 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 கைதுப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக காஷ்மீர் மண்டல போலீஸ் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related Stories: