முதுகலை கியூட் தேர்வு முடிவு இன்று வெளியீடு

புதுடெல்லி: முதுகலை மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படுகிறது.நாடு முழுவதும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ‘பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு’ (கியூட்) மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு சமீபத்தில் நடந்தன.

இத்தேர்வில் பங்கேற்க 3.6 லட்சம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 55 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்தது. முடிவுகள் வெளியானதும், மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை  தீவிரப்படுத்தும்படி, அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அது உத்தரவிட்டுள்ளது.

Related Stories: