பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம்: ஒன்றிய அமைச்சர் பேட்டி

ராமநாதபுரம்: தமிழக பாஜ தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள், உடமைகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் பானு பிரசாத் சிங் வர்மா கூறினார். ராமநாதபுரம் மாவட்ட பாஜ ஓபிசி அணி செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரசாத் சிங் வர்மா கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘தமிழக வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எப்போதும் துணை நிற்கும்.

தமிழக பாஜ தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள், உடமைகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை வந்ததும் அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். தேசிய புலனாய்வு ஏஜென்சி, அமலாக்கத்துறை சோதனை தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்பட பெரும்பாலான மாநிலங்களில் நடந்துள்ளது. நாட்டுக்கு எதிராக தேச விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் யாராகினும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: