வன்முறை சம்பவ பாதிப்பை கண்டறிய பாஜ எம்எல்ஏக்கள் தலைமையில் குழு: மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் நடந்த பெட்ரோல் குண்டுகள் வீசுதல் சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பை அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மாநில தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பாஜ சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, மதுரை கோட்டத்திற்கு எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, பொது செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் கே.மாணிக்கம் அடங்கிய குழுவும், திருச்சி, விழுப்புரம், சென்னைக்கு சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாநில செயலாளர்கள் ஏ.ஜி.சம்பத், மீனாட்சி, தடா பெரியசாமி ஆகியோர் அடங்கிய குழுவும்,வேலூர்,சேலம் கோட்டத்திற்கு எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி தலைமையில் மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி,  மாநில செய்தி தொடர்பாளர் சி.நரசிம்மன், சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டாக்டர் டெய்சி சரண் அடங்கிய குழுவும், கோயம்புத்தூர் கோட்டத்திற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: