அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த மாதத்தின் ஒப்பிடுகையில் 10% உயர்வு

சென்னை: அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த மாதத்தின் ஒப்பிடுகையில் 10% உயர்ந்து இருப்பது சாமானிய மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரூ.108 விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம்பருப்பு இப்பொழுது 118 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மிளகாய்த்தூள் ரூ 40 விலை அதிகரித்து கிலோ ரூ. 400-க்கு விற்கப்படுகிறது. மிளகு, மல்லி, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்களும் 10% அளவு விலை உயந்துள்ளது.

இதனால் வாழ்க்கையை நகர்த்துவதை மிகப்பெரிய பாரமாக இருப்பதாக கூலிவேலைக்கு செல்வோர் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பிடுகையில் 25 கிலோ கொண்ட அரிசி சாக்குப்பை சராசரியாக 100 ரூபாய் வரை விலை உயர்ந்து இருக்கிறது. ஆந்திராவில் இருந்து நெல் வரத்து மிகவும் குறைந்துவிட்டதே இதற்க்கு கரணம் என்றும், பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பே இல்லையென்றும் வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அரிசி மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துவரக்கூடிய நிலையில் சற்று ஆறுதல் தரும் விதமாக பாமாயில், சன் பிலோவேர் ஆயில் விலை லிட்டர்க்கு 30 ரூபாய் வரை குறைந்து இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இறக்குமதில் ஏற்பட்ட தடை தற்பொழுது நீங்கி இருப்பதாகவும் இதன் விலை காரணமாக மேலும் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories: