பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு ‘ரீல்’ வீடியோ விட்ட சாமியார் சாவு: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி

உன்னாவ்: உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பனியா கெரா கிராமத்தில் பஜ்ரங்கி (55) என்ற சாமியார் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் வாகனங்களுக்கு பஞ்சர் பழுதுபார்க்கும் கடை நடத்தி வரும் சுபேதார் என்பவரின் கடையில் விஷத்தன்மை கொண்ட கருநாகப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாம்பை சுபேதார் கட்டையால் தாக்கி கொல்ல முயன்றார். அங்கு வந்த சாமியார் பஜ்ரங்கி, ‘பாம்பை கொல்ல வேண்டாம்’ என்று சுபேதாரை வற்புறுத்தினார். பின்னர், அந்த பாம்பை லாவகமாக பிடித்த சாமியார் பஜரங்கி, ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு சென்றார். இவர் சமூக வலைதளங்களில் ‘ரீல்’ வீடியோ வெளியிடும் ஆர்வமுள்ளவர் என்பதால், இந்த பாம்பை காட்டி அவ்வப்போது ‘ரீல்’ வீடியோ வெளியிட்டு வந்தார்.

அந்த வீடியோவில், பாம்பின் வாயை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு ‘போஸ்’ கொடுத்து பார்வையாளர்களை மிரளவைத்து வந்தார். சில சமயம், தனது கழுத்தில் பாம்பை சுற்றிக் கொண்டு போஸ் கொடுப்பார். இவ்வாறாக பாம்பை காட்டி ரீல் வீடியோ விட்ட சாமியார் பஜ்ரங்கை, அந்த பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு லக்னோ அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த  சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது; ஆனால் நேற்று மாலை அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானதால், அவரது ஆதரவாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories: