அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சைக் கண்டித்து மறுமலர்ச்ச்சி தி.மு.க. ஆர்ப்பாட்டம்: வைகோ அழைப்பு

சென்னை: மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி அவர்களின் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம், மீண்டும் 06.10.2022 அன்று மாலை நடைபெற உள்ளது. அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சுக்கு - போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 06.10.2022 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு என்னடைய தலைமையில் நடைபெற்ற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்களையும், கழகத் தோழர்களையும் அன்புடன் அழைக்கிறேன் என்று வைகோ  கூறியுள்ளார்.

Related Stories: