வரும் 30ம் தேதிக்குள் குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த வேண்டும்: இன்று அனைத்து வசூல் மையங்களும் இயங்கும்; சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: குடிநீர், கழிவுநீர் வரிகளை வரும் 30ம்தேதிக்குள் நுகர்வோர் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக இன்று அனைத்து வசூல் மையங்களும் இயங்கும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நுகர்வோர் செலுத்த வேண்டும். இதற்காக, அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நுகர்வோர் வரி செலுத்துவதற்கு ஏதுவாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் இயங்கும். மேலும், நுகர்வோர் தங்களது நிலுவைத் தொகையை https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் ரொக்கமாக வரி செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: